மாடுகளை வெட்ட தடை.. மத்திய அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது.. கேரள அமைச்சர் திட்டவட்டம்
மாடுகளை வெட்ட தடை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கேரள அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்; மாடுகளை வெட்ட விதித்த தடையை ஏற்க முடியாது என கேரள அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை வெட்ட மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலும் கேரள ஓட்டல்களில் மாட்டு இறைச்சி உணவுகள்தான் பரிமாறப்படும்.

தமிழகத்தில் இருந்து தமிழக முக்கிய எல்லை வழியாக இறைச்சிக்காக மாடுகள் கால்நடையாகவும், லாரிகள் மூலமும் அடிக்கடி கொண்டு செல்லப்படுவது வாடிக்கை. குறிப்பாக, செங்கோட்டை-புளியரை எல்லை வழியாக கால்நடையாக அடிக்கடி மாடுகள் கொண்டு செல்லப்படுகின்றன. மாடுகள் வெட்ட தடை என்ற உத்தரவால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேரள அமைச்சர் சுனில் குமார் கூறியதாவது:
மாடுகளை வெட்ட மத்திய அரசு விதித்த தடையை ஏற்க முடியாது. கால் நடைகள் அறுப்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்ததான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டு மக்களின் உணவு பழக்க வழக்கத்தை கட்டுபடுத்துவது போல் உள்ளது. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுனில் குமார் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications