காஷ்மீரில் தீவிரவாதிகள்- ராணுவத்தினர் இடையே சண்டை.. பொதுமக்கள் 7 பலி!
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் உள்ளூர்வாசிகள் 7 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் உள்ளூர்வாசிகள் 7 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, பதிலடி தாக்குதல் இறங்கினர் ராணுவத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
இதனால் அங்கிருக்கும் மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள்.இந்நிலையில், புல்வாமா என்கவுண்டரில் உள்ளுர் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.போராட்டம் காரணமாக மொபைல் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றமான நிலை நிலவி வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications