பெங்களூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: பள்ளி வளாகத்தில் 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர்
பெங்களூர்: பள்ளி வளாகத்தில் 8 வயது மாணவியை பலாத்காரம் செய்ததாக பெங்களூரிலுள்ள ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் கடந்த மாத துவக்கத்தில், மாரத்தஹள்ளி பகுதியிலுள்ள பள்ளியொன்றில் 6 வயது மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஸ்கேட்டிங் பயிற்றுநர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 உடற்பயிற்சி ஆசிரியர்களும் கைதானார்கள். இந்த சம்பவத்தையடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டது.

பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக பெங்களூரில் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதேபோன்ற பலாத்கார சம்பவம் பெங்களூரின் தலகாட்புரா காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது. இப்பகுதியின் கனகபுரா ரோடு, குப்பலால் கேட் பகுதியிலுள்ள ஒரு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் 8 வயது மாணவி ஆசிரியரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.
இதுதொடர்பாக இன்று தலகாட்புரா போலீசில் சிறுமியின் தந்தை அளித்த புகாரை தொடர்ந்து, கவுரவ ஆசிரியராக பணியாற்றிய 63வயதான சந்திரமவுலி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications