பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பெண்ணை தாக்கிய நபர் விற்ற செல்போனை வாங்கியவர் கைது
பெங்களூர்: ஏ.டி.எம். மையத்தில் 38 வயது பெண் வங்கி அதிகாரியை தாக்கிய நபரிடம் இருந்து அந்த பெண்ணின் செல்போனை விலைக்கு வாங்கியவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக இருக்கும் ஜோதி உதய்குமார்(38) நேற்று முன்தினம் காலை மாநகராட்சி அலுவலகம் அருகே இருக்கும் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம். மையத்தில் அவர் பணம் எடுத்ததும் மர்ம நபர் உள்ளே புகுந்து அவரை துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். மேலும் அவரின் தலையில் அரிவாளால் பல முறை தாக்கிவிட்டு பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த ஜோதி கெங்கேரியில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். அந்த நபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா ஹெச். ஆவ்ராத்கர் மற்றும் கூடுதல் கமிஷனர் பிரனாப் மொஹந்தி ஆகியோர் நேற்று ஜோதியை மருத்துவமனையில் சந்தித்து குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்று அவரிடம் உறுதி அளித்தனர். அந்த நபர் அவரை திரும்பத் திரும்ப தலையில் தாக்கியதில் ஜோதியின் வலது பக்க உடல் செயல் இழந்துவிட்டது.
இந்நிலையில் அந்த மர்ம நபரிடம் இருந்து ஜோதியின் செல்போனை விலைக்கு வாங்கிய நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மர்ம நபர் குறித்த விவரங்களை போலீசார் கேட்டு வருகின்றனர். விரைவில் அந்த மர்ம ஆசாமி சிக்குவார் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இதற்கிடையே காவலாளி இல்லாத அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் உடனே காவலாளியை பணியமர்த்த வேண்டும் இல்லை என்றால் ஒருவரை நியமிக்கும் வரை மையங்களை மூட வேண்டும் என்று கர்நாடக அரசு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications