சசிகலாவிற்கு பரோல் தர முடியாது... பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு!
சசிகலாவிற்கு பரோல் வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
Recommended Video

பெங்களூரு: சசிகலாவிற்கு பரோல் வழங்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று கூறியது.

நடராஜனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக நடராஜனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனை பார்ப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா பெங்களூரு சிறைத்துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் சசிகலா கோரிய பரோலை வழங்க சிறைத்துறை மறுத்துள்ளது. அண்மையில் பரோல் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறையும் பரோல் தர முடியாது என்றும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உயிரிழப்புகள் நேர்ந்தால் மட்டுமே சிறை விடுப்பு தர முடியும் என்றும் சிறைத்துறை கூறிவிட்டதாக தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications