கபாலி படத்திற்காக தேர்வை ஒத்தி வைத்ததா பெங்களூர் பல்கலைக்கழகம்?
பெங்களூர்: சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கபாலி திரைப்படம் பெரும் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளதை போட்டோஷாப் கோஷ்டிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
கபாலி டிக்கெட் எடுப்பதற்காக வெளிநாட்டில் நீண்ட கியூவில் ரசிகர்கள் நிற்பதை போலவெல்லாம் போட்டோஷாப் செய்து அதை பேஸ்புக்கில் போட்டு லைக் அள்ளுகிறார்கள்.
இப்படித்தான், இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. கபாலி ரிலீசை முன்னிட்டு இன்று நடத்தவிருந்த தேர்வை பெங்களூர் பல்கலைக்கழகம் தள்ளி வைத்துவிட்டதாக அந்த தகவல் கூறுகிறது.
— Mohandas Menon (@mohanstatsman) July 22, 2016
பெங்களூர் யூனிவர்சிட்டி சின்னத்துடன் கூடிய சுற்றரிக்கையை இதற்கு ஆதாரமாக கூறி ஷேர் செ்யது வருகிறார்கள். ஆனால் அப்படி தேர்வு எதுவும் தள்ளி வைக்கப்படவில்லை என்று பெங்களூர் யுனிவர்சிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
@mohanstatsman don't post fake things and degrade our university..Please!
— Avinash Ranganath (@avi_ranganath) July 22, 2016
பிரபலங்களும் கூட இது தெரியாமல் அந்த பொய் தகவலை மும்முரமாக ஷேர் செய்துவருவதுதான் இதில் வேடிக்கை. இப்படி செய்வதற்கு கர்நாடகாவில் கண்டனங்களும் எழுகின்றன.












Click it and Unblock the Notifications