மாணவருக்கு அடி,உதை – தீயாய் பரவும் பெங்களூரு பயிற்சி நிறுவன முதல்வர் வீடியோ
பெங்களூரூ: பெங்களூரில் மாணவர் ஒருவரை நோட்ஸ் எடுக்கவில்லை என கல்வி நிறுவன முதல்வர் அடித்து உதைக்கும் காட்சி தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வர் , மாணவரை அடித்து உதைக்கும் காட்சிகள் சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல்வர் அடித்து உதைப்பதை நேரில் பார்த்த மற்றொரு மாணவர் பள்ளி வகுப்பறைக்குள் நடந்த இந்த காட்சியை தனது ஸ்மார்ட் போனில் படம் பிடித்து உள்ளார். பின்னர் சேனல்களுக்கும் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில், நாங்கள் இந்த முதல்வர் தேவை இல்லை என்று நினைக்கிறோம்.நீங்கள் இந்த வீடியோவை பாருங்கள் ஒருமாணவரை முதல்வர் எவ்வாறு கொடுமை படுத்துகிறார்.
இதுபோல் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை கருதி இது குறித்து யாரிடமும் புகார் கூறவில்லை. ,மாணவர்களை புத்தகம் கொண்டு வரவில்லை, ஷூ அழுக்காக உள்ளது, உடைகளை அயர்ன் செய்து போடவில்லை என்றெல்லாம் கூறி அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.. என்கின்றனர்.
இந்த கல்லூரி எம்எல் ஏ ஒருவரின் அறக்கட்டளை மூலம் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆனால் போலீசில் மாணவர்கள் எந்த வித புகாரும் அளிக்கவில்லை. தற்போது மாணவர்கள் மனித உரிமை ஆணையத்தையும் போலீசாரையும் அணுக முடிவு செய்து உள்ளனர்.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவன முதல்வரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications