ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் தடம்புரண்டது: 12 பேர் பலி- 87 பேர் காயம்!!
ஆனைக்கல்: ஓசூர் அருகே பெங்களூர்- எர்ணாகுளம் இடையே செல்லும் இன்டர்சிட்டி பயணிகள் ரயில் (எண்: 12677) இன்று காலை தடம் புரண்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வரையில் செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று காலை 6.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டது. தமிழகத்தின் ஓசூர் அருகே உள்ள கர்நாடகா பகுதியான ஆனைக்கல் என்ற இடத்தில் காலை 7.33 மணியளவில் வந்த இந்த ரயில் திடீரென விபத்துக்குள்ளது.
இதில் ரயிலின் D8, D9 உட்பட மொத்தம் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெட்டிகள் ஒன்றோடு ஒன்று பலமாக மோதின.

இந்த விபத்தில் 12 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்த 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தமிழக, கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட D8, D9 பெட்டிகளை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
I am on way to Bangalore to visit accident site to help all stranded. All possible help will be rendered to families affected
— Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015 இரு மாநிலங்களில் இருந்தும் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர்.
அரக்கோணம் மற்றும் பெங்களூரில் இருந்து தேசிய பேரிடம் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

பாறாங்கல் காரணமா?
முதலில் ரயில் தடம் புரண்டதற்கு இன்ஜினில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த பாறங்கல் மோதியதால் விபத்து நடந்ததாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற ஆனைக்கல் பகுதியான காட்டுப் பகுதியாகும். விபத்து நடைபெற்ற இடத்தில் 20 அடி பள்ளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மேற்பகுதியில் இருந்து பாறாங்கல் உருண்டு தண்டவாளத்தின் மீது விழுந்திருக்கக் கூடும். இதன் மீது ரயில் மோதியதால் விபத்து நடைபெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
Unfortunate rail accident in Karnataka,Boulder fell on track in Ghat section, train hit it. directed all sr officers to rush with full help
— Suresh Prabhu (@sureshpprabhu) February 13, 2015 இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் இது குறித்து ஆராய்வதற்காக பெங்களூரு விரைந்து கொண்டிருப்பதாகவும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

அத்துடன் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தை கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பார்வையிட்டார்.
கேரளா அமைச்சர் விரைகிறார்
இவ்விபத்து குறித்து அறிந்த உடன் அமைச்சர் ஆர்யதன் முகமதுவை சம்பவ இடத்துக்கு செல்லுமாறு கேரளா மாநில முதல்வர் உம்மன் சாண்டி அறிவுறுத்தினார்.
அவர் மலப்புரம் ஆட்சியர் பிஜூ, எர்ணாகுளம் ஐ.ஜி. அஜித்குமாருடன் பெங்களூரு புறப்பட்டார். அமைச்சர் ஆர்யதன் முகமது தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை பார்வையிட இருக்கிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications