கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது: நீரவ் மோடி
கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது என நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: கடனை திருப்பிச் செலுத்தும் அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது என நீரவ் மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நீரவ்மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் அங்கிருந்தபடி நீரவ் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் வங்கியில் பெற்ற கடனை அடைப்பதற்கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். உங்களின் நடவடிக்கை எனது பிராண்டையும் பிஸ்னஸையும் அழித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இதனால் கடனை திருப்பி செலுத்தும் திறன் மற்றும் செலுத்தப்படாத கடனை அடைக்கும் திறன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தான் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 5000 கோடி தான் என்றும் நீரவ் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications