அட மக்கள் திருந்தவே மாட்டார்களா? "மேகி" மோகத்தால் பிளாக்கில் ரூ.10 பாக்கெட் ரூ.102 க்கு விற்பனை...
டெல்லி : தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் பாக்கெட் தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் பதுக்கி வைத்து ரூ.10 பாக்கெட் ரூ.100 க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் 10 ரூபாய்க்கு மிக எளிதில் கிடைத்த 2 மினிட்ஸ் நூடுல்ஸ் பாக்கெட் டெல்லியில் சில இடங்களில் ரூ.102 வரை விற்பனை செய்யப்படுகிறது.

2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ் மீதான சமீபத்திய தடையை தொடர்ந்து, நெஸ்லே நிறுவனம் இதை திரும்பப் பெற்று வருகிறது. என்றாலும் சில கடைக்காரர்கள் தங்களுக்கு கடைசியாக வந்த பாக்கெட்களை இருப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் இதன் சுவைக்கு அடிமையாகிப் போன வாடிக்கையாளர்கள் சிலர் துணிந்து இந்த பாக்கெட்களை வாங்குகின்றனர். இதனால் 75 கிராம் பாக்கெட் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பேசிய வசந்த் விஹார் பகுதி கடைக்காரர் ஒருவர், நாங்கள் என்ன விலை சொன்னாலும் மக்கள் வாங்குவதற்கு தயாராக இருக்கும்போது நாங்கள் ஏன் இவற்றை தூக்கி எறிய வேண்டும் என்றார்.
பல ஆண்டுகளாக மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதாகவும், அதில் உள்ள காரீயத்துக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி தங்களிடம் இருப்பதாகவே கருதுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
மேற்கு டெல்லியின் ஜானக்புரி பகுதியிலும் இவ்வாறு மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் போன் மூலம் வரும் ஆர்டர்களின் பேரில் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகிறது. பரிச்சயமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இதனை விற்பனை செய்வதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications