ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்யலாம் - பார் கவுன்சில் வலியுறுத்தல்
சென்னை: உயர் நீதிமன்றம் அறிவித்த புதிய விதிகளை ஏற்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யலாம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னையில் கடந்த 6 ஆம் தேதி பேரணி நடத்தினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கறிஞர்களுக்கான சட்ட விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சட்டத் திருத்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துகளை தலைமை நீதிபதியிடம் முறைப்படி தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சில வழக்கறிஞர்கள், சட்ட திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கங்கள் மூலமாக போராட்டங்களை நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் நீதித்துறை சார்ந்த பணிகளை விடுத்து, வேறுவிதமான தேவையற்ற இடையூறுகளை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுககும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications