என்டிடிவியில் இருந்து மூத்த செய்தியாளர் பர்கா தத் விலகல்!
என்டிடிவியில் பணிபுரிந்து வந்த மூத்த செய்தியாளர் பர்காதத் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் குளோபல் ஒப்பினியன் பத்திரிக்கையில்
டெல்லி: என்டிடிவியில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த மூத்த செய்தியாளர் பர்காதத் அந்த தொலைக்காட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் குளோபல் ஒப்பினியன் பத்திரிக்கையில் பணியாற்றவுள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளரான பர்காதத் என்டிடிவியில் கடந்த 21 ஆண்டுகளாக பணிபிரிந்து வந்தார். வி தி பீப்புள் என்ற நிகழ்ச்சியை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் என்டிடிவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பர்காதத் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிக்கையான தி வாஷிங்டன் போஸ்ட்டின் ஒரு பிரிவான குளோபல் ஒப்பினியனில் பணியாற்ற உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்காதத் ஒரு சிறந்த கட்டுரையாளர், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். சர்வதேச ஒளிபரப்பு சங்கம் 2012ஆம் ஆண்டின் அச்சமற்ற நிரூபர் என்ற பட்டமளித்தது.
பர்காதத் இரண்டுமுறை உலக பொருளாதார மன்றத்தின் நாளைய தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அவர் தனது முதுகலை பட்டத்தை கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியில் முடித்துள்ளார்.
வாஷிங்டன் போஸ்ட் தனது நிறுவனத்தை விரிவாக்கவுள்ளது இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பத்திரிக்கையாளர்ளை சேர்த்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications