சீமாந்திராவில் காங்கிரஸ் தோற்க பவன் கல்யாண் காரணமில்லை: சொல்வது அண்ணன் சிரஞ்சீவி
திருப்பதி: சீமாந்திரா மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைய பவன் கல்யாண் காரணமில்லை என்று சிரஞ்சீவியும், அவரின் பிரச்சாரம்தான் வெற்றிக்கு காரணம் என்று மோடியும் தெரிவித்துள்ளனர்.
சீமாந்திராவிலுள்ள 25 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் பெரும்பான்மையான காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ஆந்திர மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த மக்கள் காங்கிரசை தோற்கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கி காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் சீரஞ்சிவியின் தம்பி நடிகர் பவன்கல்யாணின் பிரச்சாரமும் மோடியின் அலையும் காங்கிரசை மண்ணை கவ்வ செய்துவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய சீமாந்திரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சீரஞ்சிவியும் கலந்து கொண்டார். கூட்டமுடிவில் சிரஞ்சீவியை சந்தித்த நிருபர்கள் ‘உங்கள் தம்பி பிரசாரத்தால்தான் காங்கிரஸ் தோற்றதாக கூறப்படுகிறதே' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு சீரஞ்சிவி பதில் கூறுகையில் "காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. பவன் கல்யாண் பிரச்சாரத்தால் மட்டும் காங்கிரஸ் தோற்கவில்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றியை இழந்துள்ளது. மாநில பிரிவினையை சீமாந்திரா மக்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட ஆதரவு கூட ஒருங்கிணைந்த ஆந்திராவுக்குதான் இருந்தது. ஆனால் கட்சி மேலிட முடிவை ஏற்க வேண்டிய நிலையில் இருந்தோம்" என்று சிரஞ்சீவி கூறினார்.
இதனிடையே டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திரமோடி கூறுகையில், பவன் கல்யாண்ஜியின் தீவிர பிரச்சாரத்திற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications