5 மணி வரைக்கும் பொறுமையா இருங்க.. அதுக்கப்புறம் கொண்டாடுவோம்.. சொல்கிறார் எடியூரப்பா!
மாலை 5 மணி வரை பொறுமையாக இருங்கள், அதன்பின் கொண்டாடுவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: மாலை 5 மணி வரை பொறுமையாக இருங்கள், அதன்பின் கொண்டாடுவோம் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி பரபரப்பை கூட்டி வருகிறது கர்நாடக அரசியல் களம். ஆட்சியமைக்க உரிமை கோரி மஜத. காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுநருக்கு கடிதம் கொடுத்தனர்.
மெஜாரிட்டி இல்லாத நிலையில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர் வஜூபாய் வாலா. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கர்நாடகாவின் 23வது முதல்வராக ஆட்சியமைத்தார் எடியூரப்பா.

எடியூரப்பாவுக்கு சாதனை
இதனை எதிர்த்து மஜத - காங்கிரஸ் கூட்டாக தொடர்ந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதுதான் ஒரே வழி என்று கூறி இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

பெங்களூரு வருகை
இதனை முன்னிட்டு காலை 11 மணிக்கு எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். இதற்காக எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தடைந்துள்ளனர்.

மெஜாரிட்டி எங்களுக்குதான்
117 எம்எல்ஏக்களின் ஆதரவு மஜத- காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ள நிலையில் இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் 104 எம்எல்ஏக்களின் அதரவை மட்டுமே கொண்டுள்ள எடியூரப்பா எங்களுக்குதான் 100 சதவீத மெஜாரிட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.

கொண்டாடுவோம்
பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களும் மூத்த அமைச்சர்களும் இதையே கூறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா மாலை 5 மணி வரை பொறுமையாக இருங்கள். அதன்பின் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

வேலைகள் முடிந்துவிட்டதா?
104 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே கைவசம் உள்ள நிலையில் எடியூரப்பாவும் பாஜகவினரும் அதித நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர். மற்ற எம்எல்ஏக்கள் ஆதரவு தந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையா? அல்லது அதற்கான வேலைகள் முடிந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications