பியூட்டிஷியன் போட்ட டிராமா.. ஆடைகளுக்கு அடியில் செல்போன்.. அதில் ஒரு மெசேஜ்.. அசிங்கமா சிக்கிட்டாரு

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: மீரட்டில் பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் பெண் சம்பந்தப்பட்ட விஷயம்தான், இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. கணவனை பற்றி அவர் சொன்ன தகவலை நம்பிய குடும்பத்தினர், அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் குழம்பிப் போயுள்ளனர்.. ஆனால், ஆடைகளுக்கு அடியில் சிக்கிய ஒரு செல்போனும், அதில் இருந்த ஒரே ஒரு மெசேஜும் மொத்தக் கதையையும் தலைகீழாக மாற்றிவிட்டது.. என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லோஹியா நகரில் வசித்து வந்தவர் தலிப் (30). இவரது மனைவி இல்மா (27). பியூட்டி பார்லரில் வேலை செய்து வரும் இல்மாவுக்கும் தலிப்புக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

Beautician

பியூட்டி பார்லர் மனைவி

கடந்த செப்டம்பர் மாதம் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தலிப்புக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டார்.. இதனால் அதிர்ச்சியடைந்த இல்மா, உடனடியாக தன்னுடைய அண்ணன் அக்ரமிடம், "தலிப் உடம்பு சரியில்லாமல் இருந்தார்.. படுக்கையில் படுத்து கொண்டேயிருந்தார்.. பிறகு கொஞ்ச நேரத்தில் இறந்துவிட்டார்" என்று சொல்லி கதறி அழுதார்.

இதனால் தலிப்புக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினரும் சேர்ந்து கதறி அழுதனர்.. பிறகு உறவினர்கள் சூழ, தலிப்பின் உடலை முறைப்படி சடங்குகள் செய்து அடக்கமும் செய்துவிட்டனர்...

துணிமணிக்கு நடுவில் செல்போன்

இதற்கு பிறகு கடந்த அக்டோபர் 1-ம் தேதி தலிப்பின் உறவினர் ரைஸ், இல்மாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தலிப்பின் செல்போனை இல்மா மறைத்து வைத்திருந்ததை கவனித்துள்ளார்.. துணிமணிகளுக்கு நடுவில் தலிப்பின் செல்போனை இல்பா ஏன் மறைத்து வைக்க வேண்டும் என்று அந்த உறவினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது..

இதனால் இல்மாவுக்கு தெரியாமல் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.. அப்போதுதான், தலிப்புக்கும் அமன் என்பவருக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் மெசேஜை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

மனைவியின் கள்ள உறவு

அதாவது, அமன் என்பவருடன் இல்மாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.. இந்த விஷயம் தலிப்புக்கு தெரிந்துள்ளது.. இல்மாவையும் கண்டித்துள்ளார்.. அத்துடன் கள்ளக்காதலன் அமன் என்பவரிடமும், தன்னுடைய மனைவியுடன் பேசுவதை, பழகுவதை நிறுத்தி கொள்ளும்படி கேட்டு கொண்டிருந்தார்..

இது சம்பந்தமான மெசேஜ்தான், தலிப்பின் வாட்ஸ்அப்பில் இருந்துள்ளது.. இதைத்தான் உறவினர் ரைஸ் படித்து பார்த்து, உடனடியாக குடும்பத்தினரிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார்.. பிறகு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சேர்ந்து இல்மாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர்.. இறுதியில் கணவரை கொன்றுவிட்டதாக இல்மா ஒப்புக்கொண்டார்.

பகீர் வாக்குமூலம்

"கள்ளக்காதலை கைவிடும்படி தலிப் எனக்கு டார்ச்சர் செய்துகொண்டேயிருந்தார்.. கடந்த செப்டம்பர் 28-ம் தேதியும் இது தொடர்பாக எங்களுக்குள் சண்டை வந்தது.. அப்போது தலிப் தன்னை தாக்கினார்..

அப்போதுதான் தலிப்பை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.. உடனே அமனுக்கு போனை போட்டு வரவழைத்தேன்.. அமன் தனது நண்பர் ஒருவருடன் என் வீட்டுக்கு வந்தார்.. நான், அமன், அவரது நண்பர் என 3 பேரும் சேர்ந்து தலிப்பை அடித்து உதைத்தோம்.. பிறகு என்னுடைய துப்பட்டாவால் தலிப்பின் கழுத்தை அமன் நெரித்து கொன்றார்.. என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அமன் உறுதி தந்துள்ளார்" என்றார்.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்

இல்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தந்தனர்.. பிறகு போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துவிசாரித்து வருகிறார்கள்.

கோட்வாலி சர்க்கிள் ஆபீசர் சங்க்ராம சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் சொல்லும்போது, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட தலிப்பின் உடலை கல்லறையில் இருந்து வெளியே எடுத்து போஸ்ட் மார்ட்டம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இல்மா இப்போது போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பாவம் உலகமறியா குழந்தைகள்

ஆனால், நாளுக்குநாள் கள்ளக்காதல் அட்டகாசங்கள் இங்கு பெருகி வருகின்றன.. பெற்றோர்கள் செய்யும் செயல்களால் கடைசியில் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படுவது, எந்த தவறும் செய்யாத இவர்களின் பச்சிளம் குழந்தைகள்தான்.... தங்களது குழந்தைகள் வாழ்க்கை முழுவதும் வேதனையை சுமக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிந்தும், எப்படித்தான் இப்படியெல்லாம் செய்ய மனம் துணிகிறதோ???!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+