For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே கர்நாடக தேர்தல் தேதியை அறிவித்த பாஜக ஐடி விங்

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக தேர்தல் தேதியை முன்னரே அறிவித்த பாஜக ஐடி விங்- வீடியோ

    டெல்லி: தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவில் மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது.

    கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கும் என்றும் வேட்பு மனு தக்கல் செய்ய ஏப்ரல் 24 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக ஐடி விங்

    பாஜக ஐடி விங்

    வாக்கு எண்ணிக்கை மே 15 நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டசபை தேர்தலை அறிவிக்கும் முன்னரே பாஜக ஐடி விங் நிர்வாகியான அமித் மால்வியா கர்நாடக தேர்தல் தேதியை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

    மால்வியாவிடம் கேள்வி

    மால்வியாவிடம் கேள்வி

    இதைத்தொடர்ந்து அவரது டிவிட் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டது. பலரும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்பு உங்களுக்கு எப்படி தெரிந்தது என அமித் மால்வியாவிடம் கேள்வி எழுப்பினர்.

    சர்ச்சை

    சர்ச்சை

    விவகாரம் விஸ்வரூபமெடுப்பதை அறிந்த அமித் மால்வியா தனது டிவிட்டை உடனடியாக டெலிட் செய்துவிட்டார். தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே பாஜக ஐடி விங் தேர்தல் தேதியை டிவிட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    கடும் நடவடிக்கை

    கடும் நடவடிக்கை

    இதுகுறித்து செய்தியாளர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓம் பிரகாஷ் ராவத் இதுகுறித்து கண்டிப்பாக விசாரிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    English summary
    Even before the Election Commission declares the date, BJP's national Information and technology in-charge wrote the date on Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X