டெல்லியில் பெல்ஜியம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓலா டாக்சி டிரைவர் கைது
டெல்லி: டெல்லியில் 23 வயது பெல்ஜியம் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓலா டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெல்ஜியத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பணி முடிந்து சனிக்கிழமை இரவு ஓலா டாக்சியில் குர்காவ்னில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். டாக்சியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வாரை சேர்ந்த ராஜ் சிங் என்பவர் ஓட்டியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற பிறகு ஜிபிஎஸ் வேலை செய்யவில்லை அதனால் தனக்கு வழிகாட்டுமாறு டிரைவர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து டிரைவருக்கு வழிகாட்ட அந்த பெண் டிரைவருக்கு அருகில் உள்ள சீட்டில் வந்து அமர்ந்துள்ளார்.
அவர் முன் சீட்டில் வந்து அமர்ந்ததும் ராஜ் சிங் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். டாக்சியில் இருந்து இறங்கிய அந்த பெண் தெற்கு டெல்லியில் உள்ள சி.ஆர். பார்க் காவல் நிலையத்திற்கு சென்று ராஜ் சிங் மீது புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ் சிங்கை கைது செய்துள்ளனர்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications