பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் இருக்கும் உணவகம் முன்பு குண்டு வெடித்தது. இதில் சென்னையைச் சேர்ந்த பவானி(37) பலியானார். விடுமுறையை கழிக்க பெங்களூர் வந்த இடத்தில் அவர் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் கடந்த 8ம் தேதி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு நான்காவது தீவிரவாதி பற்றி தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று இரவு மங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சர்ச் தெரு குண்டுவெடிப்பு வழக்கில் நேற்றைய கைதோடு சேர்த்து மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications