பெங்களூருவில் அடாவடி ஆட்டோ டிரைவர்களை மடக்கி பிடிக்க சுற்றி திரியும் 400 'ஜேம்ஸ்பாண்டுகள்'!
பெங்களூரு: அதிக கட்டணம் வசூலிப்பது, கூப்பிட்ட இடத்துக்கு செல்ல மறுப்பது போன்ற அடாவடியில் ஈடுபடும் ஆட்டோ டிரைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக, 400 டிராபிக் போலீசாரை மஃப்டியில் களமிறக்கியுள்ளது பெங்களூரு காவல்துறை.
பெங்களூரு சிட்டி ரயில் நிலையம், கன்டோன்மென்ட் ரயில் நிலையம், மெஜஸ்டிக் மத்திய பஸ் நிலையம், சாந்திநகர் பஸ் நிலையம் போன்றவற்றுக்கு, தினமும் அதிகாலையிலேயே வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திறங்குவது வழக்கம்.

வெளி மாநில பயணிகளுக்கு பாதிப்பு
இவ்வாறு வரும் பயணிகளிடம் அநியாய கட்டணம் வசூலிக்கும் செயலில் ஆட்டோ டிரைவர்கள் பலர் ஈடுபடுகின்றனர். மேலும், தங்களுக்கு வசதிப்படாத இடத்துக்கு வரவும் மறுத்துவிடுகிறார்கள். இதனால் பெங்களூரு குறித்த அனுபவம் இல்லாத பல வெளிமாநில பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகாலை ஆபரேசன்
ஆட்டோ டிரைவர்கள் மீதான புகார்கள் அதிகரிப்பதை தொடர்ந்து பெங்களூரு நகர காவல்துறை அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. காலை 5 மணி முதல் 10 மணிவரை நகரின் முக்கியமான பகுதிகளில் மஃப்டியில் போலீசாரை ரோந்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ள போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

முக்கிய இடங்களில் முகாம்
அதன்படி மெஜஸ்டிக், சிட்டி ரயில் நிலையம், சிவாஜிநகர், சாந்திநகர், பீன்யா, யஷ்வந்த்பூர் பஸ் நிலையங்கள், கன்டோன்மென்ட் ரயில் நிலையம், மடிவாளா செக்போஸ்ட், ஃபோரம் மால், டெய்ரி சர்க்கிள் போன்ற முக்கியமான சந்திப்புகளில் மஃப்டியில் போலீசார் சுற்றிவருகின்றனர்.

வரலைன்னா அபராதம்
சாதாரண உடையில், கையில் சூட்கேசுடன் பயணிகளை போல சுற்றும் இந்த போலீசார், ஏதாவது ஒரு பகுதியின் பெயரை சொல்லி அங்கு வருமாறு ஆட்டோ டிரைவர்களை கூப்பிடுகிறார்கள். அவ்வாறு ஆட்டோ டிரைவர்கள் வந்து விட்டால் ஓகே. வரமுடியாது என்று கூறிவிட்டால் அடுத்த நொடியே போலீஸ் தனது சுயரூபத்தை காண்பித்துவிடும். ஆட்டோ டிரைவர் அபராதம் கட்ட வேண்டிவரும். அபராதம் கட்ட பணமில்லை என்று டிமிக்கி கொடுத்தாலோ, ஆட்டோவே பறிமுதல் செய்யப்படும்.

1200 ஆட்டோக்கள் பறிமுதல்
கடந்த 22ம்தேதி முதல் போலீசார் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதற்காக 400 போலீசார் மஃப்டியில் சுற்றிதிரிகின்றனர். இதுவரை 1200 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 6700 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டு.. ஸ்டிர்க்டு..
போலீசாரின் நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளபோதிலும், எதிர்பார்த்தபடியே ஆட்டோ டிரைவர்கள் கோபமடைந்துள்ளனர். சுமார் 100 ஆட்டோ டிரைவர்கள் இணைந்து பெங்களூரு மேற்கு மண்டல டிராபிக் போலீஸ் துணை கமிஷனர் கிரீஷை சந்தித்து, ஆட்டோக்களை பறிமுதல் செய்திருக்க கூடாது என்று வாதிட்டனர். ஆனால் ஆட்டோ டிரைவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காத துணை கமிஷனரோ, அபராதத்தை கோர்ட்டில் செலுத்தினால் மட்டுமே ஆட்டோக்கள் திருப்பி அளிக்கப்படும் என்று கூறிவிட்டார்.

சென்னை எப்படி?
இந்த மாதிரி சென்னையிலும் சோதனை நடத்தலாம்தானே? இங்குதான் மீட்டரே பொருத்துவதில்லையே, அப்புறம் எப்படி மீட்டருக்கு மேல் பணம் கேட்டால் தெரியும் என்கிறீர்களா?
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications