எம்.பி.ஏ. மாணவர் உள்பட 3 தீவிரவாதிகளை கைது செய்த பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: இந்தியன் முஜாஹிதீன், தெஹ்ரீக் இ தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய அன்சாருல் தவ்ஹீத் அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் சுல்தான் அர்மாரின் ஆட்களான எம்.பி.ஏ. மாணவர்கள் உள்பட 3 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 பேரிடமும் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என். ரெட்டி தெரிவித்துள்ளார்.

கைது
செய்யது இஸ்மாயில் அபாக்(34), சதாம் ஹுசைன்(35) மற்றும் அப்துஸ்ஸுபுர் என்ற 24 வயது எம்.பி.ஏ. மாணவர் ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவலை வைத்து பெங்களூர் காக்ஸ் டவுனில் உள்ள ஒரு வீடு மற்றும் பட்கலில் சோதனை நடத்தியபோது குண்டுகள் தயாரிக்கத் தேவையான அம்மோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் டைமர்கள், பிவிசி பைப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விசாரணை
அந்த 3 பேரின் நோக்கம் என்ன என்பது குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அந்த 3 பேரும் பட்கலைச் சேர்ந்த ஆனால் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் அர்மாருடன் தொடர்பில் இருந்தது தெளிவாகத் தெரிகிறது என்று கமிஷனர் ரெட்டி தெரிவித்துள்ளார். அர்மார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications