தனது செல்போனை எடுத்து பார்த்த கணவனின் கையில் கத்தியால் குத்திய மனைவி
பெங்களூர்: பெங்களூரில் தனது செல்போனை எடுத்துப் பார்த்த கணவனின் விரல்களை பெண் ஒருவர் கத்தியால் கிழித்துள்ளார்.
பீகாரை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் சிங். அவரது மனைவி சுனிதா சிங். அவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஹெச்.எஸ்.ஆர். லேஅவுட் அருகே இருக்கும் கைகொண்டனஹள்ளியில் வசித்து வருகிறார்கள்.

பிரகாஷ் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய சுனிதா அண்மையில் தான் வேலையை ராஜினாமா செய்துள்ளார். சுனிதா எப்பொழுது பார்த்தாலும் செல்போனும், கையுமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ம் பணி முடிந்து இரவு 11 மணிக்கு பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். சுனிதாவிடம் சாப்பாடு கேட்டதற்கு சமைக்கவில்லை, ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன் வந்துவிடும் என்று கூறிவிட்டு செல்போனில் பிசியாகிவிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பிரகாஷ் கடுப்பாகி அப்படி என்ன எப்பொழுது பார்த்தாலும் செல்போன் அதில் என்ன தான் இருக்கு என்று நானும் பார்க்கிறேன் என்று கூறி அதை பறித்துப் பார்த்தார்.
செல்போனை பறித்தவுடன் சமையல் அறைக்கு சென்ற சுனிதாவை பிரகாஷ் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுனிதா கத்தியை எடுத்து தனது கணவனின் வலது கை விரல்களை கிழித்துவிட்டார்.
இது குறித்து கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரோ அவர்களை சமாதானம் செய்து வைக்க வருமாறு அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications