வெற்றிலை போட்டாச்சா.. அப்போ இதோ பிடிங்க, ஒரு ஆணுறை!
பாட்னா: மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், பால்வினை நோய்களை தடுக்கவும் வசதியாக வெற்றிலை பாக்குடன் சேர்த்து இலவசமாக ஆணுறையை வழங்கிவருகிறார் பிகாரை சேர்ந்த ஒரு வெற்றிலை-பாக்கு கடைக்காரர்.
பிகார் மாநிலம், கதிகார் மாவட்டம், பல்கா பசார் பகுதியில், வெற்றிலை-பாக்கு, பீடா கடை வைத்துள்ளவர் நந்த லால். இவர் தனது கடையில் வெற்றிலை வாங்க வருவோருக்கு இலவச ஆணுறை பாக்கெட்டுகளை வழங்கி அசத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகை பெருக்கம், எய்ட்ஸ் நோய் குறித்து படித்து தெரிந்து கொண்டேன். இந்த பிரச்சினைகளை தீர்க்க இந்தியனாக உள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் முயற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
எனது கடைக்கு வெற்றிலை, பீடா வாங்க வருவோரில் பெரும்பாலானோர் இளம் வயதினர்தான். எனவே, அவர்களுக்கு ஆணுறைகளை ஏன் அளிக்க கூடாது என்ற எண்ணம் தோன்றியது. ஆணுறை மூலம், மக்கள் தொகை பெருக்கம், எய்ட்ஸ் நோய் பரவல் ஆகிய இரு பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அந்த எண்ணத்தை செயல்படுத்தினேன்.
ஆணுறை பாக்கெட்டை இலவசமாக கொடுத்தபோது, அதை வாங்க வாடிக்கையாளர்கள் முதலில் தயக்கம் காட்டினர். நான் எடுத்துச் சொன்ன பிறகு ஆணுறைகளை வாங்கிக் கொண்டனர். ஆணுறைக்கு செலவு செய்து ஏன் நஷ்டப்படுகிறீர்கள் என்று எனது மனைவி கடிந்து கொண்டார். பிறகு அவரையும் நான்தான் சமாதானப்படுத்தினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நந்த லாலின் சேவையை அறிந்து கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, தினமும் சில பாக்கெட் ஆணுறைகளை இலவசமாக நந்தலால் கடைக்கு சப்ளை செய்ய தொடங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications