கேரளாவில் தள்ளுபடியில் மது விற்பனை: சரக்கு வாங்க அலை மோதிய குடிமகன்கள்
திருவனந்தபுரம்: கேரள மாநில அரசு மதுபானக் கடைகளில் திடீரென தள்ளுபடி விலையில் சரக்குகளை விற்பனை செய்வதால் அங்கு குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது.
கேரளாவை மது இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

புதிதாக மதுபார்கள் தொடங்க உரிமங்கள் ரத்து என்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2ஆம் தேதி காந்திஜெயந்தியையொட்டி மாநிலத்தில் உள்ள 10 சதவீத மதுபானக்கடைகளை நிரந்தரமாக மூடி கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
பாதி விலையில் மது
இந்நிலையில், கேரள அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை அதிரடியாகக் குறைத்து விற்பனை செய்யப்பட்டது. ரூ.200க்கு விற்பனையான விஸ்கி ரூ.110க்கும், ரூ.130க்கு விற்பனையான ரம் ரூ.70க்கும் விலை குறைத்து விற்கப்பட்டது.
அலைமோதிய குடிமகன்கள்
இந்தத் தகவல் பரவியதும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு மதுபானங்களை வாங்கி சென்றனர்.
வரிசை வரிசையாய்
திருவனந்தபுரம், கொச்சி, திருச்சூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மதுபான கடைகளில் குறைந்த விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதால் அந்தக் கடைகளில் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றனர்.
விலை குறைந்த மது
மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டது பற்றி மதுபான விற்பனை கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, இது தள்ளுபடி விற்பனையோ திடீர் விலை குறைப்போ இல்லை என்று தெரிவித்தனர்.மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலையில் தருவதைதான் நாங்கள் விற்பனை செய்கிறோம் என்றனர்.
கடைகளை மூடும் முன்பு
கேரளாவில் மதுபானக்கடைகளை முழுவதுமாக மூடப்போவதாக சொல்லும் கேரள அரசு கடைசியில் அனைவரையும் குடிகாரர்களாக மாற்றிவிட்டுத்தான் மூடுவார்கள் போலிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications