அப்பளம் வாங்கலையோ அப்பளம்..கொரோனாவை ஒழிக்குமாம் பாபிஜி அப்பளம்- மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: தாம் அறிமுகப்படுத்தும் பாபிஜி அப்பளத்தை வாங்கி சாப்பிட்டால் கொரோனா ஒழிந்துவிடும் என மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.

கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் படுதீவிரமாக உள்ளன. தற்போதுதான் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான சோதனைகள் தொடங்கி உள்ளன.

கொரோனா மருந்து

கொரோனா மருந்து

உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படி, அடுத்த ஆண்டு முற்பகுதி வரை கொரோனா மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லையாம். ஏனெனில் பல கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது என்கிறது அந்த அமைப்பு. ஆனால் நமது நாட்டில் கொரோனாவை குணப்படுத்த ஏராளமான கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

கொரோனாவும் பதஞ்சலியும்

கொரோனாவும் பதஞ்சலியும்

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் திடீரென கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என அறிவித்தது. ஆனால் மத்திய அரசு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதால் அப்படியே பல்டி அடித்துவிட்டது பதஞ்சலி நிறுவனம். இப்போது கொரோனா எதிர்ப்பு மருந்து அல்ல, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்து என்கிறது பதஞ்சலி.

கோமியம் குடித்தால் சரியாகும்

கோமியம் குடித்தால் சரியாகும்

மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர்களோ, பசுமாட்டின் கோமியத்தை குடித்தால் அத்தனை வைரஸ்களையும் எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். மது அருந்துகிற கழுதைகளுக்கு கோமியத்தின் மகத்துவம் தெரியுமா? என எகிறுகின்றனர். இந்துத்துவா அமைப்பினர் பலரும் கோமியத்தை கொரோனா மருந்தாகவும் வலியுறுத்துகின்றனர்.

பாபிஜி அப்பளமும் கொரோனாவும்

இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் அதிரடியாக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். பாபிஜி என்ற அப்பளத்தை அவர் அறிமுகம் செய்த கையோடு, அந்த அப்பளம்தான் கொரோனாவை ஒழிக்கும் சக்தி கொண்டது எனவும் பிரசாரம் செய்கிறார் அந்த வீடியோவில். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் இந்த அப்பளத்தை தயாரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+