Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவனா கடத்தல் வழக்கு.. நடிகை கவ்யா மாதவன் ஆடை நிறுவனத்தில் போலீஸ் அதிரடி சோதனை

பாவனா கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை கவ்யா மாதவன் ஆடை நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நடிகை கவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

நடிகை பாவனா கடத்தல் தொடர்பாக நடிகர் திலீப், நதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நடிகர் திலீப்புக்கு முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் சிறையில் இருந்து எழுதிய கடிதமும் வெளியானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

Bhavana kidnapping case, actor Kavya Madhavan’s shop searched police

விசாரணையில் நடிகர் திலீபனின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான கவ்யா மாதவன் நடத்தும் ஆடை நிறுவனத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதால் அந்த ஆடை நிறுவனத்தை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர்.

இந்நிலையில் கொச்சி போலீசார் யாருக்கும் முன் அறிவிப்பு கொடுக்காமல் திடீரென கவ்யா மாதவன் ஆடை நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பாவனா விவகாரத்தில் நடிகை கவ்யா மாதவன் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்திய விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல்சர் சுனில் சிறையில் உள்ள அறைவாசியிடம் ரகசிய தகவலை பகிர்ந்ததால் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+