ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரும் மனு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைப்பு
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரிய அன்பழகன் மனு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேலேமுறையீட்டு வழக்கில் இருந்து அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்க கோரிய மனு கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் வகேலா இதேபோன்ற மனுவை முன்பொருமுறை விசாரித்துள்ளதால், வேறு அமர்வுக்கு மாற்ற கோரியது பவானிசிங் தரப்பு.
இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் நீதிபதி என்.குமார் மற்றும் பி.வீரப்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வு விசாரணையை கடந்த இரு தினங்களாக நடத்தி வருகிறது.

பவானிசிங்கை லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்ததாக அன்பழகன் தரப்பு கோர்ட்டில் தெரிவித்திருந்தது, ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை என்பதை அதில் குறிப்பிடவில்லை. எனவே, பவானிசிங்கை நியமித்தது, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையா அல்லது கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறையா என்பதை தெளிவுபடுத்துமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இன்று வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை எந்த மாநில அரசு நடத்துகிறது என்பதை வெளிவுபடுத்தவும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் நியமனம் எப்படி தவறானது என்பதை தெளிவுபடுத்தவும் அன்பழகன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications