சிறப்பு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தொடரும் கடும் கண்டனம்.. ஜெ. வழக்கில் பவானிசிங் தொடர்வாரா
டெல்லி: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானதற்கு உச்சநீதிமன்ற நீதிபதியும் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்து தீர்ப்பளித்த நிலையில் அவர் தொடர்ந்தும் இந்த வழக்கில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு தனிநீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் பவானிசிங். அந்த விசாரணையின் போதே நீதிபதி குன்ஹாவின் மிகக் கடுமையான கண்டனங்களுக்கு ஆளானவர்.

பவானிசிங்கே வேணும்..
அத்துடன் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் வழக்கு தொடர்ந்த போது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இருந்த ஜெயலலிதா தரப்போ, எங்களுக்கு எதிராக பவானிசிங்கே ஆஜராக வேண்டும் என்ற விசித்திரமான மனுவை தாக்கல் செய்து பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.

குன்ஹாவிடம் குட்டு..
குறிப்பாக கடந்த ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி வாதத்தை தொடங்க வேண்டும் என்று பவானிசிங்குக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டிருந்தார். ஆனால் பவானி சிங்கோ, பள்ளிக்கூடத்தில் லீவ் லெட்டர் கொடுப்பது போல, எனக்கு பல நோய்கள் இருக்கின்றன.. 10 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர் என்று கூறி ஒரு சான்றிதழைத் தாக்கல் செய்தார். அந்த சான்றிதழை ஆய்வு செய்த குன்ஹா கொந்தளித்துப் போனார்.
நீங்கள் கொடுத்திருக்கும் மருத்துவ சான்றிதழில் மருத்துவர் பெயரும் இல்லை.. மருத்துவமனையின் பெயரும் இல்லை.. நீங்கள் சொல்லுகிற காரணமும் கூட இந்த சான்றிதழில் இல்லையே என்று கூறி நிராகரித்தார். அத்துடன் உதவி வழக்கறிஞராக இருந்த முருகேஷ் மராடியிடம் இறுதிவாதம் நீங்கள் செய்கிறீர்களா? என குன்ஹா கேட்டதற்கும் பவானிசிங் எதிர்ப்பு தெரிவித்தார்.

அபராதம் விதித்த நீதிபதி
இதில் உச்சகட்ட கோபமடைந்த குன்ஹா, இறுதிவாதம் செய்யாமல் காலம் தாழ்த்துகிற பவானிசிங்குக்கு அவரது ஒருநாள் ஊதியத்தை அதாவது ரூ60 ஆயிரத்தை அபராதமாக விதிக்கிறேன் என்று அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதிவாதத்தை தொடங்காமல் நீதிபதி குன்ஹாவிடம் தொடர்ந்து குட்டுவாங்கிக் கொண்டே இருந்தவர் பவானிசிங். மேலும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதத்தை பவானிசிங் முழுமையாக முன்வைக்கவில்லை. அவரது உதவியாளர் மராடிதான் முழுமையாகவும் வாதிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெ. ஜாமீனை எதிர்க்காத பவானி
சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதித்தார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணையின் போதும் பவானிசிங், ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீனை எதிர்க்கவில்லை. அதன் பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தினார்.

நீதிபதி குமாரசாமியிடமும் குட்டு
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் கூட நீதிபதி குமாரசாமியால் மிகவும் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் பவானிசிங். நீதிபதி குமாரசாமி கேட்ட பல கேள்விகளுக்கு பதிலே அளிக்காமல் அமைதி காத்த சம்பவங்களும், 'திரு திரு'வென முழித்த சம்பவங்களும் நீதிமன்றத்தில் அரங்கேறியிருக்கிறது.

தலைமை நீதிபதி வகேலா ஆவேசம்..
முன்னதாக மேல்முறையீட்டு வழக்கிலும் பவானிசிங்கே அரசு வழக்கறிஞராக ஆஜராக தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இதனை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வகேலாவும், சி.ஆர்.பி.சி. 24 (1)-ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது; மேல்முறையீட்டு மனுவில் பவானி சிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது; இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதபோது, பவானிசிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று அதிரடியாக கூறியிருந்தார். பின்னர் வகேலா விசாரிக்கக் கூடாது என பவானிசிங் தரப்பு ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியும் காட்டம்
இதன் பிறகு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பவானிசிங்குக்கு எதிரான அன்பழகன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்தான் உச்சநீதிமன்றத்துக்கு அவர் சென்றார். தற்போது உச்சநீதிமன்றத்திலும் பவானிசிங்குக்கு மூத்த நீதிபதி மதன் லோகூரும் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதுவும் குற்றவாளிகள் தரப்போடு இணைந்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் செயல்படுவதாக மதன் லோகூர் கூறியிருப்பது மிகவும் முக்கியமானது என சுட்டிக் காட்டுகின்றனர் சட்ட வல்லுநர்கள்.

நீடிப்பாரா பவானிசிங்?
சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து இடங்களிலும் தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டே இருக்கிறார் பவானிசிங்.. இத்தனை கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்குப் பின்னரும் பவானிசிங் தொடர்ந்தும் ஒரு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகியே தீருவேன் என அடம்பிடிப்பதும் குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு பவானிசிங்கே எங்களுக்கு அரசு வழக்கறிஞராக வேண்டும் என்று கோருவதும் இந்திய நீதித்துறையின் நேர்மை மீது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என்கின்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இத்தனை கண்டனங்களுக்குப் பின்னரும் அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிப்பது நியாயமில்லை.. அவர் தாமாக விலகிக் கொள்வதே என்று சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டினாலும் 'மனசாட்சியுடனான' இறுதி முடிவு என்பது பவானிசிங் கையில்தான் இருக்கிறது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications