மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக.. கரப்பானுக்கு பயந்து இவர் என்ன செய்தார்னு பாருங்க!
போபால்: மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் கரப்பான்பூச்சிக்கு பயந்து கொண்டு போபாலில் ஒரு இளைஞர் என்ன செய்தார் என பாருங்கள்.
பெண்களுக்கு கரப்பான்பூச்சி, பல்லி, சிலந்தி, கம்பளிபூச்சி, மரவட்டை உள்ளிட்டவைகளை பார்த்தாலே அலர்ஜி வந்துவிடும். அதிலும் கரப்பான், பல்லியை பார்த்தாலே போதும் கத்தி கூப்பாடு போட்டு ஒரு வழி செய்து விடுவார்கள்.
இது இப்படி இருக்க.. வீட்டில் கரப்பான்பூச்சி இருந்தால் அதை அடித்துவிடுவார்கள், இல்லாவிட்டால் தூக்கி வெளியே எறிந்துவிடுவார்கள்.

கரப்பான்பூச்சி
ஆனால் போபாலில் புதிதாக திருமணம் ஆன பெண்ணுக்கு கரப்பான் பூச்சியை பார்த்தாலே தெனாலி படத்தில் வரும் கமல்ஹாசன் எல்லாத்துக்கும் பயப்படுவது போல் அந்த பெண்ணுக்கும் பயம் போல!. இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 18 முறை வீட்டை மாற்றியுள்ளார்கள்.

மத்திய பிரதேசம்
ஆம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த இந்த சம்பவத்தில் கணவர் சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து வருகிறார். இவர்களுக்கு 2017ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அப்போது வீட்டின் சமையல் அறையில் கரப்பான் பூச்சியை பார்த்த அந்த பெண் பிறரது ஜவ்வு கிழியும் வரை கத்தியுள்ளார்.

வேறு ஒரு இடம்
இதையடுத்து சமையல் அறைக்குள் செல்லவே அந்த பெண் மறுத்துள்ளார். பின்னர் வேறு வீட்டிற்கு செல்ல வேண்டும் என கணவரை தொடர்ந்து வற்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக தங்கள் வீட்டை வேறு ஒரு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

3 ஆண்டுகளில் 18 வீடுகள்
ஆனால் அந்த வீட்டிலும் கரப்பான் தொல்லை இருக்கவே 3 ஆண்டுகளில் இதுவரை 18 வீடுகளை மாற்றிவிட்டார். இதையடுத்து மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் சென்ற நிலையில் அவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிட மறுத்துவிட்டார்.

விவாகரத்து
தனது பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் தன்னை மனநல மருத்துவரிடம் கணவர் அழைத்து சென்றதால் ஆத்திரமடைந்தார் மனைவி. கணவரோ இனி இவருடன் வாழ முடியாது என்ற நிலை உள்ளதால் அந்த பெண்ணை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளாராம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications