இப்படியொரு பிறந்தநாள் பரிசுக்கு நன்றி.. பிரதமர் மோடி, அமித் ஷாவை கிண்டல் செய்த சத்தீஸ்கர் முதல்வர்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வீடு உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், தனக்கு விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசு கொடுத்ததற்கு பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நன்றி என நக்கலாக தெரிவித்துள்ளார் பூபேஷ் பாகல்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
சத்தீஸ்கரில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, உதவியாளர்கள் மணீஷ் பஞ்சோர் மற்றும் ஆஷிஷ் வர்மா ஆகியோரின் வீடுகள் என பூபேஷ் பாகலுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
துர்க்கில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளால் ஆத்திரமடைந்தே பாஜக, அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் ரெய்டு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பூபேஷ் பாகல், "மதிப்பிற்குரிய பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அவர்களே! எனது அரசியல் ஆலோசகர் மற்றும் உட்பட எனது நெருங்கிய நண்பர்களுக்கு அமலாக்கத்துறையை அனுப்பி எனது பிறந்தநாளில் நீங்கள் எனக்கு வழங்கிய விலைமதிப்பற்ற பரிசுக்கு மிக்க நன்றி." என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். "சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டரில் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications