பஞ்சாப், ஹரியானாவில் காங்கிரஸ் இரண்டாக உடைகிறதூ! தனிக் கட்சி தொடங்குகின்றனர் முன்னாள் முதல்வர்கள்!!
சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களின் முன்னாள் முதல்வர்களான அம்ரீந்தர்சிங், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் தனிக் கட்சிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. அப்போது முதலே தேர்தலில் காங்கிரஸ் முகமாக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்திக்கு எதிராக தொடர்ச்சியாக கலகக் குரல்கள் வெடித்து வருகின்றன.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கட்சி மேலிடத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது.
இதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும், லோக்சபா எம்.பி.,யுமான அம்ரீந்தர் சிங், ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
ராகுலின் ஆதரவாளரான பிரதாப்சிங் பஜ்வா பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கிறார். பஜ்வாவுக்கும் அம்ரீந்தர் சிங்குக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதேபோல் ஹரியானா முன்னாள் முதல்வரான பூபீந்தர்சிங் ஹூடாவும் ராகுல் மீது கோபத்தில் உள்ளார். ராகுலின் விசுவாசியும் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் தன்வரை அவரால் சமாளிக்க முடியவில்லை. இதனால் அம்ரீந்தர் சிங், பூபீந்தர்சிங் ஹூடா ஆகியோர் காங்கிரசிலிருந்து வெளியேறி தங்கள் மாநிலங்களில் தனித் தனியாக புதிய கட்சிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications