லோக்சபா தேர்தல்- பாஜக அணிக்கு 212- காங்கிரஸ் அணிக்கு 103 இடங்கள் கிடைக்கும்: கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடைபெற்றால் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 212 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 103 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
லோக்சபா தேர்தலையொட்டி கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இந்தியா டுடே- சிவோட்டர் கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
28 மாநிலங்களில் 21,792 பேரிடம் நடத்தப்பட்ட இக் கருத்துக் கணிப்பில் மத்தியில் பாஜக அணிக்குதான் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அணி
2009ஆம் ஆண்டில் 159 இடங்களை பெற்றிருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது தேர்தல் நடைபெற்றால் 212 தொகுதிகளைக் கைப்பற்றுமாம். அதாவது 207 முதல் 217 வரை அந்த அணிக்கு கிடைக்குமாம். மொத்தம் 34% வாக்குகள் பாஜக அணிக்கு கிடைக்குமாம்.

பாஜகவுக்கு 188 இடம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 188 இடங்கள் கிடைக்குமாம். சிவசேனா 14, அகாலிதள் 5 இடங்களைக் கைப்பற்றுமாம்.

காங்கிரஸ் அணி
2009ஆம் ஆண்டில் 259 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 103 இடங்கள்தான் கிடைக்குமாம். அதாவது 98 முதல் 108 தொகுதிகள் வரை கிடைக்குமாம். மொத்தம் 23% வாக்குகளை இந்த அணி பெறக்கூடுமாம்.

காங்கிரஸுக்கு 91 தானாம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 91 இடங்கள்தான் கிடைக்குமாம். தேசியவாத காங்கிரஸ் 5, ராஷ்டிரிய லோக்தள் -1 இடத்தைதான் கைப்பற்றுமாம்.

இதர கட்சிகள்..
பாஜக, காங்கிரஸ் அணிகள் அல்லாத இதர கட்சிகள் மொத்தம் 228 இடங்களைக் கைப்பற்றும் என்கிறது கருத்து கணிப்பு. அதாவது 223 முதல் 233 இடங்கள் வரை பாஜக, காங்கிரஸ் அல்லாத அணிக்கு கிடைக்குமாம். இந்த கட்சிகளுக்கு 43% வாக்குகள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்!












Click it and Unblock the Notifications