நாய்களுக்கு வெகு விமரிசையாக நடந்த திருமணம்... உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு !
பாட்னா: உத்தரப்பிரதேச மாநிலம், குஷாம்பியில் இரண்டு நாய்களுக்கு வெகு விமரிசையாக செய்து வைக்கப்பட்ட திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஷாம்பியில் பவாரா என்ற கிராமத்தில் இந்து முறைப்படி நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தின் போது மேளதாளங்கள் முழங்க பெண் நாயை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இந்த திருமணத்தை பத்திரிகை அடித்து விழா போன்று மிகவும் விமரிசையாக நடத்தினர். சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஆடல், பாடல் மற்றும் டிஜே கச்சேரியும் நடத்தப்பட்டது.
இதையடுத்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவும் பரிமாறப்பட்டது.
திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் பெண் நாயின் உரிமையாளர் கண்ணீர் மல்க மணமகன் நாயின் வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்த காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.
Big fat "dog wedding" held in Kaushambi (UP), 5k people in attendance; complete with ceremonies & tearful send off.https://t.co/mpGTyRfCjO
— ANI (@ANI_news) March 12, 2016












Click it and Unblock the Notifications