இந்தி மொழி எங்கே? ஆங்கில போர்டை பார்த்ததும் அதட்டிய நிதிஷ் குமார்! ஆடிப்போன அதிகாரி! பரபர பின்னணி
பாட்னா: ‛இந்தி மொழி எங்கே.. இந்தி தான் எங்க மொழி. இந்தி மொழிக்கு முக்கியத்துவத்தை அழிக்க பாக்குறீயா??' எனக்கூறி ஆங்கில மொழியில் வைக்கப்பட்ட பேனரை அகற்றும்படி அதிகாரிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான இவர் முதலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தார்.

அதன்பிறகு பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராகி ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள பாங்கா பகுதியில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைத்தார்.
இந்த வேளையில் டிஜிட்டல் நூலகத்தின் பெயர் என்பது ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்தது. பீகார் மாநில மக்கள் இந்தியை தாய் மொழியாக கொண்டுள்ளனர். அங்கு இந்தி என்பது அலுவல் மொழியாகவும் இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் டிஜிட்டல் நூலகத்துக்கு ஆங்கிலத்தில் அந்த போர்டு அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை கவனித்த முதல்வர் நிதிஷ் குமார் கடும் கோபமடைந்தனர். உடனடியாக அவர் அதிகாரியை அழைத்து போர்டை மாற்றும்படி கூறினார். மேலும், ‛‛இந்தி மொழியின் எங்கள் மொழி. இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அழிக்க பார்க்கீறியா? எதற்காக இந்தியில் போர்டு வைப்பதற்கு பதில் ஆங்கிலத்தில் வைத்தீர்கள்?. நாம் அனைவரும் இந்தியில் படித்தவர்கள். அதோடு இங்கு நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி இல்லை'' என அதிகாரியை திட்டி கடும் கோபமடைந்தார்.

அதுமட்டுமின்றி உடனே இந்தி மொழியில் போர்டை மாற்றம் வேண்டும் என ஆர்டர் போட்டார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக ஊழியர்கள் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் நூலகத்தின் போர்டை அகற்றி இந்தி மொழியில் போர்டு வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஆங்கிலத்தில் போர்டு இருப்பதை பார்த்து அதனை இந்தி மொழியில் மாற்றும்படி அதிகாரிகளை நிதிஷ் குமார் கடிந்து கொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications