பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்- நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு- முதல்வர் பதவி ராஜினாமா?
பாட்னா: பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் நிதிஷ்குமாரின் ஜேடியூ மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக நிதிஷ்குமார் உருவாக்கிய "இந்தியா" கூட்டணி அவரை ஓரம்கட்டி விட்டதால் அதிருப்தி அடைந்துள்ளாராம் நிதிஷ்குமார். "இந்தியா" கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்பார்த்த நிதிஷ்குமாருக்கு தாம் ஓரம் கட்டப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாம்.
இதனால் தற்போதைய ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமார் இணைய முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் 28-ந் தேதி பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நிதிஷ்குமார் சந்தித்தார். இதனால் தமது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் பரவின. இருப்பினும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நிதிஷ்குமார் திரும்பி இருக்கிறார். அதனால் ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இன்னொரு பக்கம் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் முதல்வராவவதைத் தடுக்க ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் படுதீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications