பீகார் தேர்தல் முடிவுகள் 2025: உடனுக்குடன் தகவல்களைத் தெரிந்து கொள்ள Dailyhunt உடன் இணைந்திருங்கள்
பாட்னா: பீகார் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சட்டசபைத் தேர்தல் முடிவுகள், நவம்பர் 14, வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவைத் தொடர்ந்து, இம்முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் 243 தொகுதிகளிலும் 90,700க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இது நாடு முழுக்கவே ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்று பரவலாகக் கருதப்படுகிறது.
பீகார் மக்கள் என்ன முடிவை எடுத்துள்ளனர் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்பதால்.. ஒவ்வொரு தொகுதியும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பீகார் அரசியலில் அடுத்து என்ன என்ற கேள்வியே இப்போது அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி (NDA) ஆட்சி தக்க வைக்குமா? அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 ஆண்டுகால என்டிஏ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருமா?

முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்குமா அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியான "இந்தியா" ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. பீகாரில் கடந்த 20 ஆண்டுகளில் ஓரிரு ஆண்டுகள் நீங்கலாக என்டிஏ ஆட்சி செய்து வருகிறது.
பீகார் தேர்தல் முடிவுகளை உங்களுக்கு Dailyhunt உடனுக்குடன் வழங்கும். இதுவரை இல்லாத வேகம் மற்றும் துல்லியத்துடன் Dailyhunt தேர்தல் முடிவுகளை வழங்கும்.
நம்பர் மற்றும் டேட்டாவை தாண்டி, தேர்தல் முடிவுகள் ஆட்சியிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த ஆழமான பார்வையையும் தேர்தல் டிரெண்ட், அனாலிசிஸ் குறித்து தகவல்களை Dailyhunt வழங்கும்.
Dailyhunt தேர்தல் முடிவுகளில் என்ன எதிர்பார்க்கலாம்?
பீகார் தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளலாம்.
தொகுதி வாரியாகவும், கட்சி வாரியாகவும் முடிவுகள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மக்களின் விருப்பம் எப்படி மாறி உள்ளது என்பதை அறிய, கடந்த காலத் தேர்தல்களுடன் ஒப்பிட்டு டேட்டா வழங்கப்படும்.
அரசியல் வல்லுநர்களின் கருத்துகள், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் மற்றும் விவாதங்கள் இடம்பெறும்!
லைவ் வீடியோ, வைரல் மீம்ஸ் சுவாரசியமான வீடியோக்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் நீங்கள் பெறலாம்!
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நவம்பர் 14 அன்று Dailyhunt உடன் இணைந்திருங்கள். தேர்தலின் ஒவ்வொரு பரபரப்பான தருணத்தையும் மிஸ் செய்யாமல் இருக்கலாம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications