Bihar Lok Sabha Election Results LIVE: பீகாரில் 34 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை! இந்தியா 6 சீட்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: 40 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றப்போவது யார்? கடந்த தேர்தலில் பாஜக - ஜேடியூ கூட்டணி 39 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் இந்த முறை 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ் பாஸ்வான்), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

Lok Sabha Election 2024 BJP Congress 2024

இதில் பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா தலா 1 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளும், இடதுசாரி கட்சிகள் 8 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

உத்தர பிரதேசம் (80 தொகுதிகள்), மகாராஷ்டிரா (48 தொகுதிகள்), மேற்கு வங்கம் (42 தொகுதிகள்) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக பீகார் விளங்குகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரில், 2019 ஆம் ஆண்டு 39 தொகுதிகளை பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

இந்த முறை 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டுமென்ற முடிவுடன் பல்வேறு வியூகங்களை பா.ஜ.க வகுத்து தேர்தல் பணி ஆற்றியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பீகாரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர். ஆனால், கடைசி நேரத்தில் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஐக்கியமானது. அவரது அடுத்தடுத்த இந்த மாற்றம் ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.

எனினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அணியே அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, பீகாரில் நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 1 இடத்திலும், ஆர்ஜேடி 3 இடங்களிலும் மட்டுமே வென்றுள்ளது.

பீகாரில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 34 இடங்களிலும், இந்தியா கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+