ஸ்வீட் கொடுக்க "லேட்"... கொந்தளித்த எம்.எல்.ஏ. மீது கொதிக்கும் எண்ணையால் அபிஷேகம்!
பாட்னா: பீகாரில் ஸ்வீட் கடை ஒன்றில் நடந்த தகராறில் எம்.எல்.ஏ. மீது கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலம் பீளகஞ்ச்சட்டசபை தொகுதி ராஷ்டிரிய ஜனதா தல எம்.எல்.ஏ சுரேந்திர பிரசாத் யாதவ். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கயாவிற்கு சென்று விட்டு பீளகஞ்ச் திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது, வழியில் கயா திகிரி ரோட்டில் உள்ள ஸ்ரீராம் தில் குத் பந்தர் என்ற கடையில் ஸ்வீட் வாங்கச் சென்றுள்ளார் சுரேந்திரா. ஸ்வீட் கொடுக்க கால தாமதம் ஆகியுள்ளது. ஆத்திரமடைந்த சுரேந்திரா கடை உரிமையாளரைத் திட்டியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கோபத்தில் சுரேந்திரா மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி உள்ளார் கடை உரிமையாளர்.

இதில் எம்.எல் ஏயின் காது மற்றும் கழுத்துபகுதியில் பலத்த காயம் உண்டானது. உடனடியாக சுரேந்திரா அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சுரேந்திரா தரப்பில் ஒரு புகாரும், ஸ்வீட் கடை உரிமையாளர் தரப்பில் ஒரு புகாரும் அளிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஸ்வீட் கடை உரிமையாளர் மீது மட்டும் வழக்குப் போட்டுள்ளனராம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications