15 வயது மாணவி பலாத்கார விவகாரம்- எம்.எல்.ஏ ராஜ்பல்லா யாதவ் சொத்துக்கள் முடக்கம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 15 வயதான சிறுமியை பலாத்காரத்திற்கு உள்ளாக்கி தலைமறைவாக இருக்கும் எம்.எல்.ஏ ராஜ்பல்லா யாதவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். மாநிலத்தை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 6 ஆம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜ்பல்லா யாதவை கைது செய்ய பீகார் மாநில போலீஸ் டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்துள்ளார். .
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துள்சி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த ஹில்சா நகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜ்பல்லா யாதவின் சொத்துகளை ஜப்தி செய்யும்படி நேற்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது சொந்த ஊரான நவாடா மாவட்டத்தில் உள்ள பத்ரா கிராமத்துக்கு இன்று கோர்ட் அலுவலருடன் கிட்டதட்ட 150 போலீசார் வந்து அவருடைய வீடு, தோட்டம் உட்பட அனைத்து சொத்துக்களையும் ஜப்தி செய்தனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications