பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு
பாட்னா: பீகாரில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்றுப் பேசிய பொதுக்கூட்டத்தில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசாராய் மவட்டத்தில் ஞாயிறன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் 'சங்கல்ப்ப யாத்திரை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார்.
அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய அவர், பீகாரில் மீண்டும் இருண்டகால ஆட்சியை ஏற்படுத்துவதற்காக லல்லு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

தனது தலைமையிலான மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களை பட்டியலிட்ட நிதீஷ்குமார், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்று, ஜாமினில் விடுதலையான லல்லு பிரசாத் யாதவ்வுக்கு நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்று திரும்பிய தியாகிக்கு இணையான வரவேற்பு அளிக்கப்படுகிறது என்றார்.
எதிர்க்கட்சிகளை தாக்கி இவ்வாறு காரசாரமாக பேசிக்கொண்டிருந்த போது மேடையின் எதிரே அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் நிதிஷ் குமாரை நோக்கி ஒரு செருப்பை வேகமாக வீசினார்.
இதனால், அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமார் சட்டென்று பேச்சை நிறுத்தினார். சிறிது நேரம் செய்வதறியாது திகைத்துப் போய் நின்ற அவர் பிறகு பேச்சைத் தொடர்ந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பை வீசியவர் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போன போலீசார் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications