பீகார் : இளம்பெண்ணை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இளைஞர் அடித்துக் கொலை
கயா: பீகாரில் இளம்பெண் ஒருவரை அவதூறாக சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இளைஞரை, அப்பெண்ணின் உறவினர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் கயாவிற்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில், தாகூர் என்ற இளைஞர் ஒருவர் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அந்த போஸ்டர்கள் இளம்பெண் ஒருவரை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப் பட்டிருந்தது.

இது தொடர்பாக தகவலறிந்த சம்பந்தப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்களான தீபக் மற்றும் விக்கி என்ற இருவர், தாகூரைத் தேடிச் சென்று தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தாகூர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதலை தடுக்க முற்பட்ட தாகூரின் நண்பர்கள் இருவருக்கும் அடி விழுந்துள்ளது. அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தீபக் மற்றும் விக்கி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி அமர்தீப் குமார் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இளைஞர் எதற்காக, அப்பெண்ணை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டினார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications