”நாங்களும் மதுவைத் தொட மாட்டோம்” .. சத்தியம் செய்த எம்.எல்.ஏக்கள் - பீகாரில் நாளை முதல் மதுவிலக்கு!
பீகார்: பீகாரில் மதுவிலக்கு அமலாகியுள்ளதையடுத்து தாங்களும் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்ற எம்.எல்.ஏக்களால் பெரும் வியப்பு ஏற்பட்டுள்ளது.
பீகாரில் நாளை முதல் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி மெகா வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற நிதிஷ்குமார் நான் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனைக்கு தடை விதிப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சட்ட திருத்தம் நேற்று பீகார் மாநில சட்ட சபையில் கொண்டு வரப்பட்டது. பீகார் சட்டசபையில் நேற்று குரல் ஓட்டெடுப்பு மூலம் அந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இனி யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை தொடர்ந்து பீகார் சட்டசபையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் நாளை முதல் நாங்கள் குடிக்க மாட்டோம் என்று ஒவ்வொரு எம்.எல்.ஏவும் உறுது மொழி ஏற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் சட்டசபையில் கூறினார். நிதிஷ்குமாரின் வேண்டுகோளை ஏற்று 243 எம்.எல்.ஏக்களும் ஒரு மித்த குரலில் இனி நாங்கள் மது குடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
பீகார் மாநிலத்தில் தடையை மீறி யாராவது மது விற்பனை செய்தால் கள்ள சாராயம் காய்ச்சினால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறைதண்டனை அளிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்து இருப்பதால் அம்மாநிலத்தில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications