'ஒரு நட்சத்திரத்தின் நம்ப முடியாத தோற்றம்’... மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில்!
டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து தன் வாழ்க்கையைத் தொடங்கிய மோடி, இன்று நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்து முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரமாக விளங்குகிறார் என்றால் மறுக்க இயலாது.
அந்தவகையில், மோடியின் வாழ்க்கை வரலாற்றை சீன நாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அம்மொழியில் புத்தகமாக எழுதப் பட்டுள்ளது.

ஒரு நட்சத்திரத்தின் நம்ப முடியாத தோற்றம்....
பாஜக எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை, ‘மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்' என்ற பெயரில் சீன மொழியில் எழுதியுள்ளார்.

தெற்கு ஆசிய கல்வி மையம்...
இந்த நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய கல்வி மையம் வெளியிட்டுள்ளது.

சீன நண்பர்களுக்காக...
இந்த நூலுக்காக மோடி எழுதியுள்ள உரையில், ‘இந்தியாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை சீன நண்பர்கள் அறிந்து கொள்ள இந்த நூல் உதவும்' என நம்புவதாக கூறியுள்ளார்.

திறவுகோல்...
மேலும் இந்த நூல், சமகால இந்தியாவின் வாசலாகவும், புரிந்துணர்வு மற்றும் தோழமைக்கு திறவுகோலாகவும் அமையும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமரிடம் வழங்கப்பட்டது...
நேற்று முன்தினம் இந்தப் புத்தகத்தை பிரதமர் மோடியிடம், நூலாசிரியர் தருண் விஜய் வழங்கினார். அப்போது மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications