மீண்டும் கூட்டணியில்.. பாஜகவுக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார்: பிஜூ ஜனதா தளம் அறிவிப்பு!
புவனேஸ்வர்: பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதில் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் மும்முரம் காட்டுவதாக தெரிகிறது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவளிப்போம் என்று பிஜூ ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பிரவாத் திரிபாதி வெளிப்படையாக அறிவித்தும் உள்ளார்.
ஒடிஷாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார் முதல்வர் நவீன் பட்நாயக். தற்போதைய லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் சரியானதாக இருந்தால் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஒடிஷாவில் மொத்தம் உள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 12 முதல் 15 இடங்களைக் கைப்பற்றும்.
அதே நேரத்தில் ஒடிஷா சட்டசபைக்கும் தற்போது தேர்தல் நடைபெற்றுள்ளது. ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பிஜூ ஜனதா தளம் கட்சியால் ஒடிஷாவில் தனித்து ஆட்சி அமைக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

பாஜக அணிக்கு திடீர் ஆதரவு
இந்த நிலையில்தான் திடீரென பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயார் என பிஜூ ஜனதா தளத்தின் பிரவாத் திரிபாதி அறிவித்திருக்கிறார். ஆனால் பிஜூ ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக்கோ, அப்படியெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக சொல்லவில்லை. பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்கிறார்.

கலகக் குரல்
அதே நேரத்தில் கூட்டணி குறித்தெல்லாம் இப்படியெல்லாம் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பிஜூ ஜனதா தளத்துக்குள்ளேயே சில கலகக் குரல்களும் எழுந்துள்ளன.

பட்டும்படாமல் பதிலளிக்கும் பாஜக
இந்த விவகாரம் குறித்து அம்மாநில பாஜக தலைவர் விஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் கூறுகையில், நிச்சயமாக இங்கு 10 லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்றுவோம். பிஜூ ஜனதா தளத்தால் மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கவே முடியாது என்று பட்டும்படாமல் பதிலளித்துள்ளார்.

பாஜக ஆதரவு கோரும் பிஜூ ஜனதா தளம்
பொதுவாக ஒடிஷாவில் மீண்டும் ஆட்சி அமைக்க பிஜூ ஜனதா தளத்துக்கு பாஜக ஆதரவு அவசியம் தேவை என்றே கூறப்படுகிறது. இதனாலேயே மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஆதரவு அளிப்பது பற்றிய கருத்துகளை கட்சித் தலைவர்கள் மூலமாக வெளியிட்டு முன்னோட்டம் பார்க்க வைத்திருக்கிறார் நவீன் பட்நாயக் என்கின்றனர் ஒடிஷாவின் மூத்த பத்திரிகையாளர்கள்.

அங்கிட்டு நீங்க.. இங்கிட்டு நாங்க..
அதாவது மத்தியில் பாஜகவுக்கு ஆதரவளிக்கிறோம்.. மாநிலத்தில் நீங்கள் ஆதரவு தாருங்கள் என்பதுதான் நவீன் பட்நாயக்கின் திட்டம்.

11 ஆண்டுகால கூட்டணி
இதே பிஜூ ஜனதா தளம் 11 ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணியாகத்தான் இருந்தது. 2009 லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீட்டு பிரச்சனையில் இரு கட்சிகளிடையே உறவு முறிந்தது.

மேலிட முடிவுன்னா ஓகே
இதை சுட்டிக்காட்டும் ஒடிஷா பாஜகவினர், 2009 ஆம் ஆண்டு தேர்தலில் எங்கள் முதுகில் குத்தியது பிஜூ ஜனதா தளம். இப்போது மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் உள்நோக்கத்துடனேயே எங்களுக்கு ஆதரவு தருவதாக கூறுகின்றனர்.. இருப்பினும் மேலிடத் தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும் ஏற்போம் என்கின்றனர்.

ஜேட்லி பேச்சுவார்த்தை?
இந்நிலையில் நவீன் பட்நாயக்குடன் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்த கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றே தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications