Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் போற இடமெல்லாம் மாட்டு கோமியத்தால் சுத்தப்படுத்துவீர்களா?... பாஜகவுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி

நான் போற இடத்துக்கெல்லாம் மாட்டு கோமியத்தால் சுத்தம் செய்வீர்களா? என்று பாஜகவுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சிர்சா நகரத்தில் நான் பேசிய இடத்தை மாட்டு கோமியத்தால் சுத்தம் செய்த பாஜகவினர் நான் செல்லும் இடமெல்லாம் சுத்தப்படுத்துவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிர்சா நகரத்தில், நமது அரசியலமைப்பு நமது பெருமிதம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த பொங்கல் அன்று கலந்து கொண்டார். அவர் உத்தர கன்னடா எம்பியும் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டேவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

BJP activists sprinkles cow urine after actor Prakash Raj speaks

இதையடுத்து சம்பவ இடத்துக்கு பாஜகவின் இளைஞர் அணியினர் சென்று அங்கு பிரகாஷ் ராஜ் பேசிய இடத்தை மாட்டு கோமியத்தால் சுத்தப்படுத்தினர். இதை அறிந்த பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டரில் அவர் பதிவிடுகையில், பாஜக நிர்வாகிகள் நான் பேசிய சிர்சா நகரத்தில் மேடையை மாட்டு கோமியத்தை கொண்டு சுத்தப்படுத்தியுள்ளனர்.

இதேபோல் நான் எங்கும் சென்றாலும் இந்த பணியை அவர்கள் தொடர்வார்களா என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+