பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ஜனவரி இறுதியில் வெளியீடு!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது.
லோக்சபா தேர்தல் அட்டவணை வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளும் தயாராகி விட்டன. காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் அடுத்த மாதம் 17-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அதில் தேர்தல் வியூகம் இறுதி செய்யப்பட உள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் அடுத்தக் கட்ட பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். கடந்த 3 நாட்களாக டெல்லியில் மாநில பா.ஜ.க. தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் வாக்காளர்களை கவரும் வகையில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதுபற்றி விவாதிக்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக வரும் 24-ந் தேதி பா.ஜ.க.வின் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பா.ஜ.க.வின் பிரசார வியூகத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட உள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் 17-ந் தேதி பா.ஜ.க. செயற்குழு கூடுகிறது. அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க. தேசியக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அந்த கூட்டங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வு பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக எல்லா மாநில தலைவர்களிடமும் வேட்பாளர்கள் பெயர், அவர்களது தகுதி, திறமை பற்றிய விவரங்களை உரிய பரிந்துரையுடன் தருமாறு பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
பா.ஜ.க. தேசிய குழுவில் வேட்பாளர்கள் தேர்வு ஆய்வு செய்யப்படும். அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி மாத இறுதியில் அந்த வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications