சுவர் ஏறி குதிக்க சொல்லி பாஜக மிரட்டல்...ஹைதராபாத் 'எஸ்கேப்' குறித்து காங். பகீர் தகவல்
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் பெங்களூரில் இருந்து நேற்று இரவோடு இரவாக ஹைதராபாத் சென்று இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: பெங்களூரில் ஈகிள்டன் சொகுசு ஹோட்டலில் இருந்த போது, பாஜகவினர் கால் செய்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தொந்தரவு செய்துள்ளனர். ஹோட்டல் சுவரில் இருந்து ஏறி வெளியே குதிக்க சொல்லி உள்ளனர்.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், பாஜகவிற்கே ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் தற்போது கர்நாடகாவில் குதிரை பேரம் நடக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியும், மஜத கட்சியும் எப்படியாவது தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாத்துக் கொள்ள முடிவெடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் எல்லோரும் ஹைதராபாத் சென்றுள்ளனர். தெலுங்கானாவில் உள்ள பார்க் ஹயாட் சொகுசு விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இன்னும் இரண்டு ஹோட்டல்களில் தனி தனியாக பிரித்தும் வைக்கப்பட்டுள்ளனர். கொள்கை அடிப்படையில் யாருக்குள்ளும் சண்டை வரக்கூடாது என்பதற்காக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் பெங்களூரில் இருந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பெங்களூரில் ஈகிள்டன் சொகுசு ஹோட்டலில் இருந்த போது, பாஜகவினர் கால் செய்து காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை தொந்தரவு செய்துள்ளனர். ஹோட்டல் சுவரில் இருந்து ஏறி வெளியே குதிக்க சொல்லி உள்ளனர்.

தொடர்ந்து இப்படி டார்ச்சர் செய்துள்ளனர், அதோடு சிலரை வெளியே வர சொல்லி போன் செய்து மிரட்டியும் இருக்கிறார்கள். கடைசியில் யாரும் வரவில்லை என்றதும், அந்த ஹோட்டலுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பையும் திரும்ப பெற்றுள்ளனர். இதுவே தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.
இந்த தொடர் பிரச்சனை காரணமாகவே ஹைதராபாத்திற்கு மாறியதாக காங்கிரஸ் மற்றும் மஜத கூறியுள்ளது. பாஜக தொடர்ந்து பிரச்சனை செய்ததால், பாதுகாப்பு கருதி இப்படி இடம் மாறியதாக விளக்கம் அளித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications