ஓட்டுக்கு ரூ 500 பணம் கொடுத்த பாஜக வேட்பாளர்... வீடியோ ஆதாரத்துடன் காங். புகார்

Subscribe to Oneindia Tamil

BJP candidate caught for cash-for-vote
போபால்: வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கு ரூ 500 கொடுத்ததாக மத்தியப் பிரதேச பாரதீய ஜனதா வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பிண்ட் லோக்சபா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக பாகிரத பிரசாத் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருக்கு கட்சி டிக்கெட் வழங்கிய 24 மணி நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் நேற்று பிரசாத்தும், பிண்ட் தொகுதியைச் சேர்ந்த பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ. அரவிந்த் படோரியாவும் அட்டெர் என்ற பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்துள்ளனர். இதனை அங்கிருந்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதே போல் கத்ஜோர் என்ற நிறுவனம் சார்பில் பா.ஜனதா மறைமுகமாக அதன் உறுப்பினர்களுக்கு தேர்தலையொட்டி பணம் சப்ளை செய்தது. இதையும் காங்கிரசார் வீடியோ எடுத்தனர்.

பின்னர், இந்த வீடியோ ஆதாரங்களை போபாலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்யதேவ் கதாரே போபாலில் செய்தியாளர்கள் மத்தியில் போட்டு காண்பித்தார்.

அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறுகையில், ‘இந்த புகார் டெல்லி தலைமை தேர்தல் கமிஷனுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு உள்ளது' என்றார்.

தக்க வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப் பட்டுள்ளதால் பாஜக வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+