மோடியின் சொந்த ஊரிலேயே பாஜகவிற்கு தோல்வி!
மோடியின் சொந்த ஊரான வத்நகரில் பாஜக கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்து இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: மோடியின் சொந்த ஊரான வத்நகரில் பாஜக கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்து இருக்கிறார். வத்நகர் உள்ள உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்துள்ளது. 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் 79 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

பாஜக வெற்றி உறுதியாகி உள்ளதால் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். ஆனால் மோடி பிறந்த ஊரான வத்நகரில் பாஜக கட்சி தோல்வி அடைந்து இருக்கிறது.
வத்நகர் அமைந்து இருக்கும் உன்ஜா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா பட்டேல் வெற்றி அடைந்து இருக்கிறார். உன்ஜாவில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பட்டேல் நாராயண பாயை விட இவர் 19,529 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.
2012ல் நடந்த சட்ட சபை தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டேல் நாராயண பாய் 24201 வாக்குகள் வித்தியாசத்தில் அதே தொகுதியில் வெற்றிபெற்று இருந்தார். தற்போது இவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பட்டேல் நாராயண பாய் 62,268 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா பட்டேல் 81,797 வாக்குகள் பெற்றுள்ளார்.
மோடியின் சொந்த ஊரிலேயே பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்து இருப்பது பாஜக கட்சியினர் இடையே கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications