For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்க அமித்ஷா அழைப்பு! 1 கோடி உறுப்பினர் சேர்க்க இலக்கு!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்க வேண்டும் என்று மாநில மக்களுக்கு அழைப்புவிடுத்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, கர்நாடகாவில் 1 கோடி, உறுப்பினர்களை பாஜகவில் இணைக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

BJP chief Amit Shah calls for Congress-free Karnataka

கர்நாடகாவில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது, அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகியுள்ளன. இந்த சூழ்நிலையில் காங்கிரசை தூக்கி எறிய கர்நாடக மக்கள் முன்வர வேண்டும்.

நாட்டு மக்களை காங்கிரசிடமிருந்து தேசிய ஜனநாயக கூட்டணி மீட்டதை போல, கர்நடாக மக்களும், காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவாக மாற்ற முன்வர வேண்டும்.

கடந்த ஏழரை மாத கால மோடி அரசு, பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது, விலைவாசி குறைந்துள்ளது. கர்நாடக மத நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை சட்டத்தை அறிமுகம் செய்தது, பசுவதை தடுப்பு சட்டத்தை வாபஸ் பெற்றது போன்ற நடவடிக்கைகளின் மூலம், சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்திக் கொண்டுள்ளது.

கர்நாடக அரசின் மக்கள் விரோத போக்கையும், நிர்வாக சீர் கேட்டையும் கண்டித்து வீதிக்கு இறங்கி போராடுமாறு பாஜக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். தேசிய அளவில் பாஜகவுக்கு 10 கோடி உறுப்பினர்கலை சேர்க்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் மூன்று கோடி உறுப்பினர் சேர்க்கை நிறைவடைந்துள்ளது. கர்நாடகாவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். ஆன்லைன் மூலமாகவே உறுப்பினர்களாக சேர வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

English summary
Describing the Congress government in Karnataka as non-performing, corrupt and defunct, BJP president Amit Shah Saturday called upon the people to free the state from the ruling party. "As the NDA freed the country from the Congress at the centre, the people should free the state from the ruling party. By joining hands with our party, the people should ensure a Congress-free Karnataka," Shah told reporters here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X