பாஜக புதிய பொறுப்பாளர்கள்… கேரளா பொறுப்பாளர் ஆனார் ஹெச்.ராஜா
டெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கான புதிய பாஜக பொறுப்பாளர்கள், துணைப் பொறுப்பாளர்கள், கட்சியின் துணை அமைப்புகளுக்கான பொறுப்பாளர்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா நியமித்துள்ளார். கேரளா மாநில பொறுப்பாளராக தமிழகத்தின் ஹெச்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசிய அளவிலான "உறுப்பினர் தொடர்பு மகா இயக்கம்' இரு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நடைபெற்றது. இந்நிலையில் மாநிலங்களுக்குப் பொறுப்பாளர்களையும், துணை பொறுப்பாளர்களையும், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் அக்கட்சி அறிவித்துள்ளது
இது தொடர்பாக பாஜக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் மேலிடப் பொறுப்பாளராக முரளிதர் ராவ், துணைப் பொறுப்பாளராக சி.டி. ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் மேலிடப் பொறுப்பாளராக ஷியாம் ஜஜு, துணைப் பொறுப்பாளராக தருண் சுக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரள பொறுப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி பொறுப்பாளராக மகேஷ் கிரி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் துணை அமைப்புகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி - முரளிதர் ராவ்; மகிளா மோர்ச்சா - புரந்தேஸ்வரி தேவி; எஸ்சி மோர்ச்சா - பூபேந்திர யாதவ் (எம்.பி.); எஸ்டி மோர்ச்சா - ராம்விசார் நேதம்; சிறுபான்மைப் பிரிவு - ஃபாரூக் கான்; கிசான் மோர்ச்சா - சத்யபால் மாலிக், நித்யானந்த் (இணை பொறுப்பு); இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு - சுதா யாதவ்; கிசான் மோர்ச்சா தலைவர் - விஜய் பால் சிங் தோமர்; இதர பிற்படுத்தப்பட்டோர் மோர்ச்சா தலைவர் எஸ்.பி. சிங் பகேல்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை கிரீன் சிக்னல் கொடுப்பாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications